முல்லையில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கும் மாவட்டச் செயலாளருக்கு இடையில் சந்திப்பு

FB IMG 1617848116947
FB IMG 1617848116947

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் முகமாகவும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாகவும் முல்லை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதோடு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

2021.04.05 அன்று காலை 10.30 மணிக்கு முல்லை மாவட்ட பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் இனங்காணப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பாகவும் முல்லைமாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கான ஒன்றியம் முல்லைமாவட்ட செயலாளர் க.விமலநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகளினை சந்தித்து கலந்துரையாடியதோடு , மகஜர்ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர் மகஜரைப் பெற்றுக் கொண்டு மகஜர் தொடர்பான கருத்துகளை வழங்கியதோடு இவ்வாறாக நீங்கள் முன்னுக்கு வருகின்றபோது நாமும் உங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச்செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் முல்லை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் கிறிசலிஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் , பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். மகஜர் கையளிப்பின் பின்னர் உள்ளூர் பெண் தொழில் முயற்சியாரால் தயாரிக்கப்பட்ட நினைவுப்பரிசில் ஒன்றும் விருந்தினர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.