புறக்கோட்டை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

202005290904027261 Clothing store in the deadly fire SECVPF
202005290904027261 Clothing store in the deadly fire SECVPF

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்திலுள்ள பிளாஸ்டிக் பொருள் விற்பனை நிலையமொன்றில் இன்று (8) அதிகாலை தீ ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்களை ஈடுபடுத்தி தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு மாடிக் கட்டடமான இந்த வர்த்தக நிலையத்திலிருந்த பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.