வவுனியாவில் விபத்து; ஒருவர் படுகாயம்

IMG 5b8c977c7bd6cb039caef567f6f054c6 V
IMG 5b8c977c7bd6cb039caef567f6f054c6 V

வவுனியா பூங்கா வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த வீதியூடாக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதிக்கரையில் இருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் அங்கிருவந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.