ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு மீள ஆரம்பம்!

1617859617 6108028 hirunews
1617859617 6108028 hirunews

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தீர்மானித்தார்.

அதற்கமைய, மு.ப 10.35 மணியளவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்ட போது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.

எவ்வாறெனினும் தற்போது, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன.