போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

kaithu

ருவன்வெல்ல பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

ருவன்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோணகல்தெனிய பகுதியில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரவிலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து போலி 1000 ரூபாய் நாணயத்தாள்கள் இருண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தில் இவ்வாறான போலி நாணயத்தாள் மோசடிகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.