தங்கொட்டுவை தாங்கி எண்ணெய்யின் அறிக்கை இன்று!

download 6 1
download 6 1

தங்கொட்டுவை நகருக்கு அருகில் உள்ள எண்ணெய் ஆலையில் இரண்டு தாங்கி ஊர்திகளில் இருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் 3 நிறுவனங்களுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுங்கப்பிரிவின் பேச்சாளர், சட்ட நடவடிக்கை தொடர்பான உதவி சுங்கப்பணிப்பாளர் சுதத்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாதிரிகள் இலங்கை தரநிர்ணய நிறுவகம், சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை பிரிவு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் ஆகிய நிறுவனங்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி 55 ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் அடங்கிய இரண்டு தாங்கி ஊர்திகள் தங்கொட்டுவை பகுதியில் காவற்துறையினால் மீட்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் காவற்துறையின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் அந்த தாங்கி ஊர்திகள் சுங்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள எண்ணெய் மாதிரிகள் தொடர்பான ஒரு அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாக சுங்கப்பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அஃப்லாடொக்சின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்யின் ஒரு தொகுதியை மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.