உணவு கையாலும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்பூட்டல்!

03 1
03 1

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் வலியுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் பிரதேச சுகாதார அலுவலகம் தோறும் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உணவு கையாலும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.

பொது சுகாதார பரிசோதகர் நஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஜீப்கான் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு உணவகங்களில் உணவு தயாரிப்பது தொடர்பாகவும் அதனை கையாள்வது தொடர்பாகவும் விளக்கம் அழிக்கப்பட்டதுடன் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.