அமரபுர ராமன்ஜ சங்கசபா நிக்காய தேரர்கள் மற்றும் பல்சமய தலைவர்கள் கிழக்கிற்கு விஜயம்!

IMG 1407
IMG 1407

கிழக்கு மாகாணத்திற்கு அமரபுர ராமன்ஜ சங்கசபா நிக்காய பிரதம தேரர்கள் மற்றும் கிறிஸ்தவ வணபிதாக்கள், முஸ்லீம் மௌலவிகள் உட்பட சமயத்தலைவர்கள் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (08) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

சம் சம் பவுண்டேசனின் ஏற்பாட்டில் இந்து இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான கள விஜயம் பொத்துவில் குமுதுவிகாரை மற்றும் அந்தபகுதி முஸ்லீம் மக்களுடனான சந்திப்பு பின்னர் காத்தான்குடி பாடசாலை மாணவர்கள் பள்ளிவாசல் மௌலவிகள் உடன் சந்தித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதேபோன்னு உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேவாலய போதகர் மகேசன் ரோசான் உடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.