விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழப்பு!

1595904277 Accident L
1595904277 Accident L

பண்டாரகம, ஹொரணை வீதியின் கொத்தலாவல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் வாகனம் ஒன்றிலும் மற்றும் வேன் வாகனம் ஒன்றிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கள் முதலில் மோட்டார் வாகனத்தில் மோதி தூக்கி எறியப்பட்ட நிலையில் ஹொரணை பகுதியில் இருந்து வந்த வேனில் மோதுண்டுள்ளது.

விபத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த மோட்டார் வாகனத்தின் சாரதியும் வேன் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.