நோயாளர் நேயம்மிக்க நேரடிக் கண்காணிப்பிலான கொவிட் சிகிச்சை சாத்தியமாகுமா?

jamunaaa
jamunaaa

நோயாளர் நேயம்மிக்க நேரடிக் கண்காணிப்பிலான கொவிட் சிகிச்சை சாத்தியமாகுமா? என்று வைத்தியர் யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.

அவை பின்வருமாறு..

காசநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்திட்டமே நேரடிக் கண்காணிப்பிலான (Direct Observation Treatment Short Course – DOTS)) ஆகும். இதன் ஐந்து அம்சங்கள் :

  1. அரசியல் அர்ப்பணிப்பு ((Political Commitment))
  2. நோயினை இனங்காணல்      (Laboratory investigation)
  3. மேற்பார்வையிலான சிகிச்சை (Supervised Treatment)
  4. தொடர்ச்சியான மருந்துகளின் விநியோகம் (Continuous drug supply)
  5. கண்காணித்தலும் மதிப்பீடு செய்தலும் ((Monitoring and Evaluation

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனைச் சுலபமாகவும், அதிக செலவின்றியும் மனிதநேய அணுகுமுறையில் மேற்கொள்ள (Covid Dots)கொவிட் டொட்ஸ் செயற்றிட்டங்களைச் சமூக மட்டத்தில் உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது.

கொவிட் தொற்றாளர்களுக்கான நேரடிக் கண்காணிப்பு சிகிச்சையில் கைக்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள் :

(1) கொவிட் நோயாளர்கள் அன்டியென் பரிசோதனை மூலமும் பிசிஆர் பரிசோதனை மூலமும் இனங்காணப்படலாம்.
(2) கொவிட் நோயாளிக்கு உரிய சிகிச்சைகள் மருத்துவரினால் தீர்மானிக்கப்படலாம்.
(3) கொவிட் நோயாளிகளுக்கான மேற்பார்வையினை கோவிட் நோய் பற்றிய விளக்கங்களுடன் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளலாம்.
(4) கொவிட் நோயாளர்களுக்கு உரிய உணவு, மருந்துகள் தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படலாம்.
(5) கொவிட் நோயாளர்களின் குணமடைதலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொள்ளலாம்.

கொவிட் நோயாளிகள் முகக்கவசம் அணிதல், தனிமையில் வாழ்தல் அல்லது பரவுவகை இல்லாத காப்புகளுடன் வாழ்தல், கைகளை கழுவுதல், கிருமிநீக்கி மூலம் பாவித்த உபகரணங்களை தொற்று நீக்குதல், மற்றவர்களுடன் சமூக இடைவெளியைப் பேணல் என்பவற்றை மேற்கொண்டு சமூகத்தில் குறிப்பாக அவர்களது வாழ்விடங்களில் வாழலாம். குறிப்பாக 10 நாட்கள் சிகிச்சைபெற்ற கோவிட் நோயாளிகளும் கோவிட் டொட்ஸ் முறையில் தத்தமது இல்லங்களுக்குச் செல்லலாம்.

எமது பிரதேச வைத்தியசாலையிலுள்ள கோவிட் டொட்ஸ் செயற்றிட்டத்தை உருவாக்கலாம் கோவிட் தொற்று அதிகரிக்கும்போது சாதாரண வைத்தியசாலைச் செயற்பாடு பாதிப்படையாது அமைவதற்கு கோவிட் தொற்றைச் சமூகமட்டத்தில் பராமரித்தல் பற்றிய சிந்தனை அவசியமானது. அதற்கு காசநோயினைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் டொட்ஸ் செயற்றிட்டத்தை கையாண்டதோ அதே போன்றதொரு சுகநலத்திட்டம் பற்றிய நோக்கு அவசியமானதாகும்.எனகுறிப்பிட்டுள்ளார்.