கடந்த 7 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் அதிகரிப்பு

download 3 7
download 3 7

இலங்கையில் உள்ள அனைத்து அதிவேக வீதிகள் ஊடாகவும் புத்தாண்டு தினமான கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில் 21 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான 7 நாட்களில் மட்டும் அதிவேக வீதிகள் ஊடாக 210.33 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றதாக அதிவேக பாதைகள் மேற்பார்வை, ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவித்தார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு ஆரம்பிக்க முன்னரான 8, 9, 10, 11 ஆம் திகதிகளில் மட்டும் அதி வேக வீதி ஊடாக் 14 கோடி ரூபா வரையிலான வருமானமும், அதனை தொடர்ந்து 12,13,14 ஆம் திகதிகளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானமும் கிடைக்கப் பெற்றுள்ளன.