தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பம்!

download 8 3
download 8 3

தமிழகமெங்கும் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி ஜுன் மாதம் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

2000 ஆண்டில் இருந்து தடைக்காலம் அமல்படுத்தப்படும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு 45 நாட்கள் தடைக்காலம் என்பது 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு ஆரம்பமான மீன்பிடித் தடைக்காலம், ஜூன் மாதம் 15-ஆம் திகதி வரை அமலில் இருக்கும். கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே மீன் பிடிக்க சென்றவர்கள் ஊர் திரும்பியுள்ளனர்.