யாழ் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட யாழ் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 2

யாழ்ப்பாண காவல் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்திலும் 588 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண காவல் நிலைய உத்தியோகத்தர். மற்றைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள்.

தெல்லிப்பழை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.