ரஞ்சனைத் தேடி சிறை சென்ற நாமல்!

ra 2
ra 2

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார்.

நேற்று மாலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, அங்கு ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்வையிட்டு அவரிடம் நலன் விசாரித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றத்தால் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதேவேளை, கடந்த வாரம் அவரின் நாடாளுமன்ற ஆசனம் இரத்துச் செய்யப்பட்டு அந்த இடத்துக்கு அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.