இன்று முதல் விசேட தொடருந்து சேவைகள்

Train 2 1
Train 2 1

புத்தாண்டை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று, மீண்டும் கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று (17) முதல் விசேட தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

தூர இடங்களுக்கான தொடருந்து சேவைகளுக்கு மேலதிகமாக, மேலும் நான்கு சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.