விடுதலைப்புலிகள் போல இஸ்லாமிய பயங்கரவாதமில்லை !!

3 dde
3 dde

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

இந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத தளபாடங்களோ, அல்லது பாரிய இராணுவ நடவடிக்கைகளோ சாத்தியப்படாது என்று கூறும் ஸ்ரீலங்கா பிரதமர், அதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பே அவசியப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளினால் எழுந்த சவால்களை வெற்றிகொள்ள எமக்கு ஆயுதங்கள் மற்றும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைக் தேவைப்பட்டன. ஆனால் நாம் இன்று முகம்கொடுத்துள்ள புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பொன்றே தேவைப்படுகின்றது. சர்வதேச புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் மிக நெருங்கிய உறவைப் பேணிக்கொள்வதற்கு தேவையான வகையில் எமது வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.

இறைமையுள்ள ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் உள்ளிட்ட அரச படைகளுக்குத் தேவையான தலைமைத்துவத்தை அரசியல் தலைமைகள் என்ற ரீதியில் நாம் முழுமையாக பெற்றுக்கொடுப்போம். அதுதான் நாம் இந்த நாட்டு மக்களுக்கும், இராணுவம் உட்பட அரச படையினருக்கும் வழங்கும் வாக்குறுதியாகும்” என்று தெரிவித்தார்.