கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பான தீர்மானம்

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF

தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவினால் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக நாட்டுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன் 350,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இரண்டாவது செலுத்துகைக்காக கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.