இலங்கையில் 6 பேருக்கு இரத்த உறைவு – பவித்ரா வன்னியராச்சி

pavithra vanniarachchi
pavithra vanniarachchi

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.