7,110 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

176558812 4313851528649799 2313951081689494493 n
176558812 4313851528649799 2313951081689494493 n

சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடங்கிய ஒரு கொள்கலனை இலங்கை சுங்கத் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளின் மொத்த எடை 7,110 கிலோ கிராம் என சுங்கப் பிரிவு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் மூன்று சந்தேகத்திற்கிடமான கொள்கலன் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.