வைத்தியசாலைக்கு சென்று ஹரீனை சந்தித்தார் சஜித்

175994039 457242542028033 6876904222246081475 n
175994039 457242542028033 6876904222246081475 n

சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நலம் விசாரிக்க சென்றுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டோர் ஹரீன் பெர்னாண்டோவை பார்க்கச் சென்றனர்.

கடந்த புதன்கிழமை ஆளும் , எதிர்த்தரப்பினருக்கிடையில் நாடாளுமன்றத்தில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் , மறுநாள் வியாழக்கிழமை ஹரீன் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.