பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் -உபுல் ரோஹண

upul rohana 800x400 1
upul rohana 800x400 1

ஆகக்குறைந்தது 4 நாட்களுக்கு நாடுமுழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரியுள்ளார்.

இது தொடர்பில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றுமாலை ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்கு கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், தொற்றுநோயியல் விசேட வைத்தியர்களின் குழாமினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமது கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என உபுல் ரோஹண தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்திற்கொண்டு பொதுமக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.