வவுனியாவில் அரச கருமமொழிகள் செயலணியினால் புத்தகம் வெளியீடு

IMG 296d9a927e7d10bd99fec22c8bb40f60 V
IMG 296d9a927e7d10bd99fec22c8bb40f60 V

உலக புத்தக தினம் மற்றும் ஆங்கில மொழி தினத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் அமுலாக்கும் செயலணியினால் வாசிப்பை நேசிப்போம் எனும் கருப் பொருளை உள்ளடக்கிய மூன்று புத்தகங்கள் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் விழிப்புணர்வாக இன்றைய தினத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

வவுனியா தோணிக்கல் ஆலடி பிள்ளையார் கோவில் பிரதம குருவினால் வாசிப்பை நேசிப்போம் என்பது தொடர்பாகவும் ஆலயத்தில் அறப்பணிகளான கல்வி, சமயம், சமூகம் சார் விழிப்புணர்வு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆரம்பப்பணியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக உரை நிகழ்த்தப்பட்டதையடுத்து வவுனியா தோணிக்கல் ஆலடி பிள்ளையார் கோவிலில் ஆலயவெள்ளிப்பூஜையை தொடர்ந்து செயலணியின் செயலாளரும் ஆலய பிரதம குருவான பிரம்ம ஸ்ரீ இராஜ்மோகன சர்மாவினால் தொகுப்பகு செய்யப்பட்ட மும்மொழி சம்பந்தமான சிங்கள, தமிழ், ஆங்கில மொழிப் பயிற்சி, பேசும் சிங்களம் , பேசும் மொழி ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று புத்தகங்களும் இன்று வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இதன் முதல் பிரதியை ஆலய உப தலைவர் யோ .ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் , ஆலய பக்தர்கள் எனப்பலருக்கும் இப் புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது . இந்நிகழ்வில் செயலணியின் பொருலாளர் , முத்தையா மாசிலாமணி, சமாதான நீதவான் எனப்பலரும் கலந்து கொண்டனர்