பூந்தோட்டம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை

IMG 1731
IMG 1731

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது.

வவுனியாவில் நேற்றையதினம் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து வவுனியாவில் நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் பூந்தோட்டம் தொடர்புகளை பேணியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பூந்தோட்டம் சந்தியிலுள்ள வியாபார நிலையங்களில் கடமைபுரியும் ஊழியர்களிற்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டது.