ரிஷாத் – ரியாஜ் பதியுதீனை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!

625.500.560.320.160.600.666.800.900.160.90 1
625.500.560.320.160.600.666.800.900.160.90 1

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள, அவரின் இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன், வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை முதலான குற்றச்சாட்டுகளில், குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் ஊடாக இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.