வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு!!

karuna batti
karuna batti

வயது வேறுபாடின்றி வேலையற்ற பட்டதாரிகள் அனைவரிற்கும் வேலைவாய்ப்பபு பெற்றுக்கொடுக்கப்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தவைர் எஸ்.அணிலன் அவர்களினால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விநாயகமூர்த்தி முரளிதரனுடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மூலம் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைய பொது நிருவாக சேவை அமைச்சின் ஊடாக விரைவில் நியமனங்களை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தார்.

20 பட்டதாரிகளுக்கு வயதெல்லை கடந்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் விட்ட பிழை காரணமாக குறித்த பட்டதாரிகளின் வாழ்க்கை நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் எனவே அவர்களையும் கவனத்திற் கொண்டு நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

பிரதமர் மஹிந் ராஜபக்‌ஷ அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதிகளை மீறுபவரல்ல. அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பார் எனவும் இதன் போது அவர் உறுதியாக தெரிவித்திருந்தார்.

பட்டதாரிகள் சங்க தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை ஒரு சவாலான விடயமாக எடுத்து பட்டதாரிகளை உள்வாரி, வெளிவாரி என பிரிக்காது 57000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கினார்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்‌ஷ தான் ஆட்சிக்கு வந்தால் தை மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கொடுத்த வாக்குறுதிக்கமைய வேறுபாடின்றி அனைவருக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.