முல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடிப்பொருட்கள் மீட்பு

IMG 20210426 WA0015
IMG 20210426 WA0015

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று(26) 10 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது

குறித்த பகுதிக்கு இன்று விசேட அதிரடிப் படையினரை அழைத்து சென்று குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர். பி. ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.