ரஞ்சனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோத்தபாயவிடம் கோரும் சஜித்

thumb sajith
thumb sajith

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்குணகொளபெலஸ்ஸ சிறையில் ரஞ்சன் ராமநாயக்கவை பார்க்கச் சென்றபோது இது குறித்து அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், அது தொடர்பாக சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.