மட்டக்களப்பு மாவட்டத்தில் 1057 ஆக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

download 30 1
download 30 1

மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் மற்றும் ஹொட்டலில் கடமையாற்றும் 6 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 1057 ஆக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினையடுத்து தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுமாறான பி சி ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் இருவர் உட்பட 4 பேருக்கும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஹொட்டல்களில் கடமையாற்றும் 6 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1057 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் 72 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் 976 பேர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளதாகவும் இதுவரை 9 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு அறிவித்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றிவருமாறும் தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.