இலங்கையில் மேலும் 1,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

istockphoto 1208953647 612x612 1
istockphoto 1208953647 612x612 1

இலங்கையில் மேலும் 1,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 687 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.