சிவில் உடையுடன் காவல்துறையினர் விருந்துகள் தொடர்பில் கண்காணிக்கின்றனர்

172060
172060

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 218 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5,075 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினமும் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக விருந்துகள் மற்றும் இரவு நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவில் உடையிலும் இதற்காக கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.