ஹெரோயினுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

வேன் ஒன்றில் 400 கிராம் ஹெரோயினுடன் பயணித்த சந்தேகநபர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (05) மாலை கண்டி, யட்டவீதிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கடுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 203 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.