ஜனாதிபதி கொலை முயற்சி-சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

court 2
court 2

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மார்ச் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மினுவான்கொடை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை ஜனவரி 20ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான் உள்ளிட்ட ஐவர் கைது கைது செய்யப்பட்டிருந்தனர்

இந்நிலையில் ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த சந்தேக நபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க மினுவாங்கொடை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஏனையவர்கள் குற்றம் ஒன்றை இழைக்க தயாரில்லை என்ற விடயம் உறுதியானதை அடுத்து, அவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.