ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எமது வளர்ச்சிக்கு என்றும் துணையாக நிற்கும்

ankayan
ankayan

நாம் கல்வி பொருளாதார நிலையில் இருந்த நிலைய விட ஒரு படிமேலாக எழுச்சி காண்பதன் ஊடாகேவ மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வித்திட முடியும்.என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டள்ளார் .

இறுதிபோரில் உயிர் நீத்தர்வர்களுக்கான நினைவு நாள் ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார் .

மேலும் அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது……….

யுத்தம் முடிவைடந்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று மீளவும் எங்கள் பிரேதசங்கைளக் கட்டிெயழுப்ப ஒவ்வொருவரும் முயற்சிசெய்து வருகின்றோம். உள்நாட்டு யுத்தம் மக்கள் மனங்களில் பல வடுக்கைள ஆழமாகப் பதித்துவிட்டுச் சென்றுள்ளது. எம் மக்கள் இழந்தவற்றுக்கு ஈடு செய்ய ஏதுமில்லைஇந்த இழப்புக்கைளத் தாண்டியும் முன்னேறத் துடிக்கும் உறவுகளுக்கு கை கொடுக்க வேண்டும்.

எமது அடுத்த சந்ததி கல்வி பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டும். அதுதான் பல ஏக்கங்கேளாடு உயிர்நீத்தவர்களின் ஆன்ம ஈேடற்றத்திற்கு வழி சமைக்கும்.
மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்தஅனைத்து உயிர்களின் ஆத்மாக்களும் சாந்தியைடய இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எமது வளர்ச்சிக்கு என்றும் துணையாக நிற்கும் என நம்புகிேறன்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.