திருமண திருத்தச் சட்ட மசோதா !

1 erer2
1 erer2

இன, மத, குல பேதமின்றி இலங்கையர்கள் சகலருக்கும் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையை சட்டமாக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரேரணையாக இந்த மசோதாவை கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்னவினால் இது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தில், திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையை இலங்கையர்கள் சகலருக்கும் 18 ஆக வரையருக்க வேண்டும் எனவும், அதற்குக் குறைந்த வயதுடையவர்களிடையே இடம்பெறும் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

மலைநாட்டு விவாக, விவாகரத்து சட்டத்தின்படி இடம்பெறும் திருமணம் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின்படி இடம்பெறும் திருமணம் ஆகிய அனைத்தும் இந்த சட்ட மூலத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை வழங்கல் முறையொன்றும் அச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.