நோயாளி வைத்தியசாலை செல்ல முன்அனுமதி தேவையில்லை – அஜித் ரோஹண

ajith rohana1
ajith rohana1

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியதில்லை. சொந்த வாகனத்திலோ அல்லது பிற வாகனத்திலோ கொண்டு செல்ல முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமெனில் எந்தவொரு அனுமதியும் தேவையில்லை. இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

வாகனங்கள் மூலம் நடமாடும் சேவைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கிலேயே, சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனையின் பிரகாரம் பயணத்தடையை தளர்த்தாது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் உரிய வகையில் பின்பற்றப்படுமானால் 8ஆம் திகதிக்கு பின்னர் கட்டம், கட்டமாக இயல்பு நிலைக்குச் செல்லக்கூடியதாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.
.