தெளிவான செய்தியைச் சொல்ல எழுக தமிழில் ஒன்றிணையவேண்டும் – ஆனந்தன் எம்பி அழைப்பு

sivasakthi
sivasakthi

தெற்கிலே இருக்ககூடிய ஐனாதிபதி வேட்பாளர்களிற்கும் சரி தொடர்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிகொண்டிருக்கக் கூடியவர்களிற்கும் சரி ஒரு தெளிவான செய்தியை எழுக தமிழ் மக்கள் எழுச்சிபேரணியூடாக வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றயதினம் வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் பேரவை இரண்டு மாபெரும் மக்கள் பேரணியை நடாத்தியிருக்கிறது.

தமிழ்மக்களிற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு பேரவையால் தயாரிக்கபட்ட தீர்வு வரைபொன்றை அரசாங்கத்திற்கும், தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவருக்கும் கையளிக்கபட்டுள்ளது.

பேரவையால் உருவாக்கபட்ட தீர்வு வரைபை அடியொற்றி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களால் ஏகமனதாக மற்றொரு தீர்வுதிட்டம் தயாரிக்கபட்டு அதுவும் அரசாங்கத்திற்கு கையளிக்கபட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கபட்ட தேர்தல் டிவிஞ்ஞாபனத்தில் சொல்லபட்ட விடயங்களை அடியொற்றியே இந்த தீர்வுதிட்டங்கள் தயாரிக்கபட்டிருந்தன.

எனவே தமிழ்மக்கள் சார்பில் பாராளுமன்றம் சென்றவர்கள் அவர்களால் முன்வைக்கபட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக இந்த நான்கரை வருடம் அரசாங்கத்தை பாதுகாத்துவிட்டு தற்போது ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முதுகெலும்பு அவர்களிற்கு இல்லை என்று குறை கூறுகின்றனர்.

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் போட்டியிட்டால் என்ன சயித் போட்டியிட்டால் என்ன மீண்டும் ஜக்கியதேசியகட்சிக்கு பின்னாலும், யானைக்கு பின்னாலும் சென்று வாக்களிக்கும்படிதான் கூறுவார்கள்.

நாங்கள் நபர்களை நம்பி இனிமேலும் வாக்களிக்கமுடியாது.

தமிழ்மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளான காணிகள்விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கபட்டவர்களிற்கு நிரந்தரமான தீர்வினை வழங்குதல், வடகிழக்கில் தொல்பொருட்திணைக்களம் மற்றும் வனவளதிணைக்களத்தினால் மேற்கொள்ளபடும் நடவடிக்கைள் நிறுத்தப்படவேண்டும் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டே வாக்களிக்கவேண்டும்.

ஐனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் தெற்கில் இருக்ககூடிய ஐனாதிபதி வேட்பாளர்களிற்கும் சரி அல்லது தொடர்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிகொண்டிருக்ககூடியவர்களிற்கும் சரி ஒரு தெளிவான செய்தியை மக்கள் எழுச்சிப் பேரணியூடாக வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.- என்றார்.