கோறளைப்பற்று மத்தி பிரிவில் அன்டிஜன் பரிசோதனை – மூவருக்கு கொரோனா!

01 2 5 2
01 2 5 2

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஐம்பத்தி எட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள், கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்ட வீதியில் வசிப்பவர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரில் ஐம்பத்தி எட்டு (58) நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் இருபத்தி ஏழு (27) நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

குறித்த அன்டிஜன் பரிசோதனை நிகழ்வில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவர் மாது, அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.