கூட்டுறவுச் சங்கங்களினூடாக வீட்டில் இருந்தவாறே அத்தியாவசியப் பொருட்களை பெறலாம்!

01 1 1
01 1 1

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தற்போது நாட்டில் அமுல்படுத்தப்படும் பயணத்தடையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ள முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

பயணத்தடையின் காரணமாக மக்களுக்கு அத்தியவசியப் பொருட்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் பணியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினூடாக நடமாடும் வியாபார சேவையை மேற்கொண்டு வருகின்றோம்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் அதன் எல்லைப்பரப்பில் உள்ள பகுதிகளில் நடமாடும் விற்பனை சேவையை மேற்கொண்டுள்ளோம் என்பதுடன், இதுவரையில் வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையான மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பரப்பு அனைத்திற்கும் இச்சேவையினை சங்கங்களுக்கூடாக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

எனவே பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தேவையான அத்தியாவசிய பொருட்களை தெரிவித்து தங்களது வீட்டிற்கே பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.