தேங்கியுள்ள மரக்கறி வகைகளை உள்ளுர் வர்த்தக நிறுவனங்களிற்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் – அங்கஜன் இராமநாதன்!

IMG 20210601 150701
IMG 20210601 150701

தேங்கியுள்ள மரக்கறி மற்றும் பழ வகைகளை உள்ளுர் வர்த்தக நிறுவனங்களிற்கு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் விவசாயிகளிற்கு உறுதி வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்த அங்கஜன் இராமநாதன், அவர்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது தமது உற்பத்திகளை தம்புள்ளை சந்தை உள்ளிட்ட இடங்களிற்கு ஏற்றுமதி செய்து வந்ததாகவும், தற்போது உள்ள நிலையில் அவற்றை ஏற்றமதி செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகளால் பிரச்சினை முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, தம்புள்ளைக்கு ஏற்றி செல்லப்பட்ட விவசாய உற்பத்திகளிற்கான பணம் வழங்கப்படவில்லை எனவும், அவை விற்பனை செய்யப்படவில்லை எனவும், கழிவாக வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

உண்மை நிலை என்னவென்று அறியாது தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமது மரக்கறி மற்றும் பழங்களின் உற்பத்தி தேங்கி காணப்படுவதால் விற்பனை செய்ய முடியாது தாம் உள்ளதாகவும் விவசாயிகளில் பிரச்சினை முன்வைக்கப்பட்டது.

குறித்த உற்பத்திகளை உள்ளுர் வர்த்தக நிறுவனங்களிற்கு சந்தைப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்து தருவதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் உறுதி அளித்துள்ளார்.

குறித்த விவசாய உற்பத்திகளை அமைப்பு ஒன்றின் ஊடாக கொள்வனவு செய்து, அதனை மொத்தமாக ஓர் இடத்திலிருந்து வர்த்தக நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக விவசாயிகளிடம் அவர் குறிப்பிட்டிருந்தார்.