மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு!

7 3 620x330 1
7 3 620x330 1

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு காவல் நிலைய கூட்டில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

காவற்துறையினருபக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டக்களப்பு தலைமையக காவற்துறைப்பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று புதன்கிழமை (03) நள்ளிரவு 11 மணியளவில் காவற்துறையினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து 25 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 22 வயதுடைய சந்திரகுமார் டிலுஷசன் என்பரை காவற்துறையினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை காவல் நிலைய கூட்டில் வேறு ஒரு சம்பம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் அடைத்து வைத்துள்ள நிலையில் அதிகாலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் வீட்டின் முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடியமையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து காவற்துறையினர் சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அதேவேளை குறித்த வீட்டிற்கு சிவில் உடையில் சிஜடியினர் வந்து தனது மகனை கைது செய்துள்ளனர் எனவும் அவர் கஞ்சா பாவிப்பதாகவும் விற்பதாகவும் வீட்டை சோதனையிட்டதாகவும் இவர்கள் இங்கிருந்து எதையும் எடுக்கவில்லை எனவும் எனது மகனுக்கு வருத்தம் எதுவும் இல்லாது நல்லாகத்தான் இருந்ததாகவும் காவற்துறையினர் இரவு கொண்டு சென்றதன் பின்னர் காலையில் உயிரிழந்ததாக அறிந்தோம். எனவும் காவற்துறையினர் அடித்ததால் தான் அவர் இறந்திருக்க வேண்டும் என உயிரிழந்தவரின் பெற்றோர் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக சிரேஷ காவற்துறை அத்தியட்சகர் நேரடியாக சென்று பார்வையிட்டு காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.