கர்ப்பிணி , பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாம் வைத்தியர் இளையதம்பி உதயகுமார்! (கனகராசா சரவணன்)

WhatsApp Image 2021 06 04 at 12.11.06 1
WhatsApp Image 2021 06 04 at 12.11.06 1

எந்தவித அச்சமின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொற்று நோயில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும் என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார்.

WhatsApp Image 2021 06 04 at 12.17.55

மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய் மாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா தொற்று உலகலாக ரீதியில் பெரும் தொற்று ஏற்பட்டு வருகின்றது இதை எமது நாட்டிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடலாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எமது மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு இருந்தாலும் அதனை முன்னிலை அடிப்படையில் தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. அதேவேளை முதலில் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதுறது.

WhatsApp Image 2021 06 04 at 12.17.56

எனவே அனைத்து பாலூட்டும் தாய்மார்களும் அச்சமின்றி தடுப்பூசியை ஏற்றமுடியும் அதேவேளை கர்ப்பிணி தாய்மார்களும் வைத்திய ஆலோசனையில் தடுப்பூசியை எந்தவொரு தயக்கமே அச்சமே இன்றி தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளமுடியம். வழங்கப்படும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்து. இந்த தொற்று நோயில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம். என்றார். இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.