புதுக்குடியிருப்பில் முடக்கப்பட்ட கிராமங்களுக்கு அடுத்த கட்ட நிவாரணம்!

army
army

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த 17.05.21 அன்று தொடக்கம் 9 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் 6460 குடும்பங்கள் இந்த நிவாரணத்திற்கு தகுதிபெற்றுள்ளார்கள். அந்த குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண பணிகள் 06.06.21 அன்றுடன் நிறைவு பெறவுள்ளது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கான நிவாரண பணிகளை வழங்கிவைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான நிவாரணம் வழங்கல் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த மக்களுக்கான 5ஆயிரம் ரூபா நிவாரணங்களை வழங்குவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளேம் பிரதேசத்தில் உள்ள இரண்டு பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொதிகளையே தருகின்றார்கள் இன்னிலையில் புதுக்குடியிருப்பு கூட்டுறவு சங்கத்திற்கு உதவியாக பிரதேச செயலகம் ஊடாக 2ஆயிரம் பொதிகளை பொதியிட்டு கொடுத்துள்ளோம்.

பட்டதாரி பயிலுனர்கள் 50 பேரை வைத்து 2ஆயிரம் பொதிளை பொதிசெய்ய 6 நாட்கள் தேவைப்பட்டுள்ளன.
வடக்கில் அதிகளவான நிவாரணம் கொடுக்கும் பிரதேசமாகவே புதுக்குடியிருப்பு காணப்படுகின்றது.

07.06.21 அன்றுடன் முதற்கட்ட நிவாரணங்கள் நிறைவடைந்து 08.06.21 அன்று இரண்டாம் கட்ட நிவாரணங்கள் கொடுக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.