வாழைச்சேனையில் அறுபத்தி எட்டு பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

01 4 1 1
01 4 1 1

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று திங்கட்கிழமை அறுபத்தி எட்டு (68) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

01 7 2

வாழைச்சேனை காவற்துறையினர் பிரிவில் கொரோனா தொற்றினால் கர்ப்பினிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கர்ப்பினிப் பெண்கள் அறுபத்தி எட்டு (68) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றதுடதுடன் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

01 8 3

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.