எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை!

samayam tamil 2
samayam tamil 2

நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் அந்நாளில் திறந்து வைக்கப்படுவதுடன், முப்படையினரால் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.