விற்பனை செய்ய முடியாமல் போன மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

Government Purchased More than 9 Lakhs kg Vegetable From Farmer Presidential Task Force 1
Government Purchased More than 9 Lakhs kg Vegetable From Farmer Presidential Task Force 1

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல்போன மரக்கறி மற்றும் பழ வகைகளை, மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களினூடாக கொள்வனவு செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளை கொவிட் சிகிச்சை மையம், அரச வைத்தியசாலைகள், முப்படை மற்றும் நலன்புரி முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக்கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு விவசாய அமைச்சரினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.