யாழில் 5 குழந்தைகளுக்கு கொரோனா

202102181154452171 Tamil News Tamil News three month old baby death police investigation SECVPF
202102181154452171 Tamil News Tamil News three month old baby death police investigation SECVPF

யாழ்ப்பாணத்தில் ஒரு மாதத்திற்கு உட்பட்ட 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 12 நாட்களேயான  குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதேபோன்று  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களேயான குருநகர் பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றுக்கும்  தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், முதிராக் குழந்தைகள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 நாட்களேயான  குழந்தை ஒன்றுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.