வாழ்வாதாரத்தை இழந்துள்ள 50 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டது

images 2
images 2

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள 50 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் காவல் நிலையங்களில் வைத்து தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலருணவுப் பொதிகளை வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண வழங்கிவைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபரின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறை உத்தியோகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.