இலங்கையருக்கு பதவி வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

niiiiii
niiiiii

இலங்கையை பூர்விகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவராவார்.

வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 22 உறுப்பினர்கள் ஜனாதிபதி ஜோ பைடனால் கடந்த 4ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.