வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை நீக்கப்படுகிறது – நீர்பாசனத் திணைக்களம்

கிளிநொச்சி இரணைமடு
கிளிநொச்சி இரணைமடு

கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கைகளை நீக்குவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பருவப்பெயர்ச்சி மழையுடன் கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது.

எனவே, கங்கைகளின் பெருக்கெடுப்பு தொடர்பிலான அவதானமிக்க நிலைமை தற்போது குறைவடைந்துள்ளதால் எச்சரிக்கைகளை நீக்குவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குறிப்பிடத்தக்களவு மழை வீழச்சி பதிவாகவில்லை.

களனி, களு கங்கைகளுடன், அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் தாழ் நில பகுதிகளில் உள்ள நீரும் எதிர்வரும் நாட்களில் வழிந்தோடக்கூடும் என நீர்பாசனத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.