கம்பஹா மாவட்டத்தில் வௌ்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கான காரணம்?

1623408860 gampaha 2
1623408860 gampaha 2

கம்பஹா மாவட்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்த அறிக்கையை தயார் செய்து, இம் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு வழங்குமாறு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் நடுப்பகுதி மற்றும் இம்மாத்தின் முதல் வாரம் கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் காரணமாக கால்வாய்கள் தடைபட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் பிரதேச செயலாளர்களுக்கும் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.